×

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் மதியம் வரை படகு சேவை ரத்து

கன்னியாகுமரி, ஜன.11: கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டதால் மதியம் வரை படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்று இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப சீசன் என்பதால் தினமும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலையும் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. இப்படி கன்னியாகுமரிக்கு வந்தவர்கள் அதிகாலை சூரிய உதயத்தை கண்டு ரசித்து விட்டு பகவதியம்மன் ேகாயிலில் தரிசனம் செய்தனர்.அதன் பிறகு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்வையிட பூம்புகார் கப்பல் ேபாக்குவரத்து கழகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட கவுண்டர் திடீரென மூடப்பட்டது. பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, கன்னியாகுமரியில் காலையில் இருந்தே கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் விவகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியாத நிலை உள்ளது என்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதியம் கடல் சாதாரண நிலைக்கு திரும்பியது. இதையடுத்து பகல் 2 மணியில் இருந்து மீண்டும் படகு சேவை தொடங்கப்பட்டது.

Tags : outburst ,Kanyakumari ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி