ஆற்காடு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலி

ஆற்காடு, ஜன.11: திருவண்ணாமைலை மாவட்டம் ெபரியகொழப்பலூர் அருகே உள்ள நாரயணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு(45). கட்டிட மேஸ்திரி. இவர் தன் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் வாழப்பந்தல் சென்றார். பின்னர், இரவு மாம்பாக்கம் நோக்கி சென்றார். அப்போது, சொறையூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பைக் நிலை தடுமாறி பாலு கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பந்தல் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : maid ,Arcot ,
× RELATED ஆற்காடு அருகே மழை பெய்ய வேண்டி அரச-வேப்ப மரத்திற்கு திருமணம்