×

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ‘காயகல்ப்’ விருது: முதல் பரிசாக ரூ.15 லட்சம் வென்றது

செங்கோட்டை: கேரள மாநிலத்தில் இருந்து 1956ம் ஆண்டு செங்கோட்டை பிரிந்து தமிழகத்துடன் இணைந்தது. செங்கோட்டையில் 8.5 ஏக்கரில் அரசு மருத்துவமனை 4 ஏக்கரில் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் அரசு மருத்துவமனையின் சுற்றுப்புற தூய்மை, மருத்துவமனையின் வெளிப்படையான தன்மை ஆகியவற்றை மருத்துவ குழுவால் ஆராய்ந்து மத்திய அரசு சார்பில்  காயகல்ப் விருது வழங்கப்பட்டு வருகிறது.செங்கோட்டை அரசு மருத்துவமனை 60 படுக்கைகளுடன் சித்த மருத்துவப் பிரிவு, தொற்று நோய் பிரிவு, பிரசவ பிரிவு, கொரோனா பிரிவு, பல், இயற்கை யோகா, காசநோய், அவசர சிகிச்சை பிரிவுகளுடன் பலவித நோய்களுக்கான சிகிச்சைகளை அளித்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 700 வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் 9 மருத்துவர்கள், 15 செவிலியர்கள், 2 பார்மசிஸ்ட், 2 லேப் டெக்னீசியன், 1 எக்ஸ்ரே டெக்னீசியன், 3 அலுவலக பணியாளர்கள், 4 உதவியாளர்கள், 4  தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 40 மருத்துவ குழுவினருடன் இயங்கி வருகிறது.இந்த ஆண்டு சிறந்த அரசு மருத்துவமனைக்கான காயகல்ப் விருதை செங்கோட்டை அரசு மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த மருத்துவமனைதலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய 3 வருடங்களாக தொடர்ந்து ஆறுதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றது. இந்த ஆண்டு(2020-21) மாநில அளவில் முதல் பரிசாக காயகல்ப் விருது பெற்று ரூ.15 லட்சத்தை வென்றுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களை  ஆர்வத்துடன் ஈடுபடுத்திய மருத்துவமனை குழுவினருக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக இந்த காயகல்ப் விருது கருதப்படுகிறது. மேலும் இங்கு இடவசதி அதிகமாக உள்ளது. அதில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தினால் தமிழக-கேரள எல்லைப் பகுதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்  என்றார். …

The post செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ‘காயகல்ப்’ விருது: முதல் பரிசாக ரூ.15 லட்சம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Senkottai ,Kerala ,Tamil Nadu ,Government Hospital ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில்...