×

காளைகளுடன் நடனமாடும் சலகெருது மறித்தல் தேவராட்டம்

உடுமலை,ஜன.10: உடுமலை, மடத்துக்குளம்  சுற்றுவட்டார பகுதிகளான குடிமங்கலம் ஓன்றியம் சனுப்பட்டி ,வல்லகுண்டாபுரம் ,பெரிய  கோட்டை, சோமவாரப்பட்டி, ஜல்லிபட்டி, ஆமந்தகடவு உட்பட பல கிராம பகுதிகளில் பெண்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக இரவு நேரங்களில் காளைகளுடன் நடனமாடியும் ,கும்மிபாடல்கள் பாடியும் வருகின்றனர்.மேலும் இப்பகுதி கிராம மக்கள் பொங்கல் நாள்அன்று பிறக்கும் கன்றுகளை வேறு எதற்கும் பயன்படுத்தாமால் கோவில் மாடுகளாக விடுகின்றனர்.வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ்மக்களுக்கு ஊதியம் கொடுத்து காளைகளை வளர்த்து வருவார்கள். பொங்கலுக்கு  ஓரு மாதம் முன்பு காளைகளை அழைத்து வந்து சலகெருது மறித்தல் எனும் விளையாட்டை ஆடுவார்கள்,குச்சிகளை நீட்டினால் காளைகள் முட்ட வரவும் குச்சிகளை குறுக்கே வைத்தால் காளைகள் நிற்கவும் பழக்கி ஆடும் இந்த ஆட்டத்தோடு இல்லாமல் இசைகருவி முழுங்க தேவராட்டம் ஆண்கள் ஆடுவார்கள்.இதன் பின் பெண்கள் குழுவாக ஓன்றுகூடி கும்மியாட்டம் ஆடுவார்கள் இதில் கடவுளை புகழ்ந்தும் விவசாயி முறைகளை பற்றியும் பாடல் இசைத்து கும்மி ஆடுவார்கள் .பொங்கலுக்கு முன்பு காளைகளுக்கு படையல் செய்து அவற்றை  காளைகள் உண்ட பின்பே பொங்கலை கொண்டாட தொடங்கும் கிராமத்தினர் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கு உகந்த  கோயிலான மால கோயிலுக்கு சென்று கால் நடைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டுவார்கள்.காலம் காலமாக இந்த நிகழ்வு தொடர்ந்து வருவதாக கூறும் கிராமத்தினர் கால்நடைகளை தெய்வம் ஆக கருதி வருகிறோம்  தெரிவிக்கும் கிராம மக்கள் ஓற்றுமையை வளர்க்கவும்,கொட்டும் பனியை விரட்டவும் சிறந்த உடற்பயிற்சியாகவும் ஆடும் இந்த சலகெருது மறித்தல் தேவராட்டம்,கும்மியாட்டம், உள்ளிட்டவை விவசாயமும் கால்நடை வளர்ப்புமே பிரதானமாக இருந்த காலத்தில் பொங்கலை வரவேற்கும் விதமாக ஓருமாதத்திற்கு முன்பு இருந்த நிகழ்த்தப்பட்டு வரும் இந்த பழக்க வழக்கம் என்றுமே மாறாது என்று கூறினால் அது மிகையாகாது.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...