×

ராணுவவீரரின் மனைவி, 2 மகள்கள் கடத்தல்

உத்தமபாளையம், ஜன.10: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை வாலிபர் கடத்தியதாக ராணுவவீரர் அளித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரத்தை தெற்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (35).  ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும் சாந்தி(32) என்பவருக்கும்  9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி  8, மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். லட்சுமணன் விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சென்ற மனைவி சாந்தி, மற்றும் இரண்டு மகள்களையும் காணவில்லை. இதனால் ராணுவவீரர் லட்சுமணன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடினார். இந்த நிலையில் ராயப்பன்பட்டியை சேர்ந்த ராஜா மகன் ரினோஸ் (32) என்பவர்  சாந்தி மற்றும் தனது இரண்டு மகள்களையும் காரில் கடத்தி சென்றதாக ராயப்பன்பட்டி போலீஸ்நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். இதனடிப்படையில் ராயப்பன்பட்டி  போலீசார் வழக்குப்பதிவு செய்து ரினோஸை  தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே பரபரப்பு


Tags : deceased ,daughters ,
× RELATED ஆழ்வார்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு