10ம் வகுப்பு படித்தோருக்கு வேலை வாய்ப்பு

சிவகங்கை, ஜன.10: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்ததாவது: நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனம் பங்கேற்று பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்த பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Tags : educators ,
× RELATED நம்பிக்கை தளராமல் புத்துணர்வோடு...