மாநில அளவிலான கால்பந்து துவக்கம்

திண்டுக்கல், ஜன. 10: திண்டுக்கல் பார்வதி கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் நேற்று நடைபெற்றது. மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. வெற்றி பெற்று முதலிடம் பெறும் அணிக்கு கேகேஆர்.நடராஜன் பார்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை கோப்பையும், பரிசு தொகை ரூ.12 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு பார்வதி அம்மாள் நினைவு கோப்பையும், பரிசுத்தொகை ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும். இதில் கல்லூரியின் செயலர் தர், இயக்குனர் பிரவீன், முதல்வர் சுகுமார், துணை முதல்வர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முத்துப்பாண்டி விளையாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார். இத்தகவலை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலாளர் கலைச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Related Stories:

>