×

சாத்தான்குளம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்தால் அபராதம்

சாத்தான்குளம், ஜன. 10: சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என பேருராட்சி செயல் அலுவலர் நாகராஜன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் மைக் மூலம் பிரசாரம் நடத்தப்பட்டது. அதில் அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது, இருப்பு வைக்கக்கூடாது. விற்கக் கூடாது. எனவே தங்களிடம் இருப்புள்ள பொருட்களை பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பேரூராட்சி சார்பில் சோதனை செய்யும்போது வியாபார கடைகளில் விற்பனைக்கோ அல்லது பொதுமக்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதற்கு மாற்றாக துணியாலான பொருள்களை பயன்படுத்துமாறு செயல் அலுவலர் நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.



Tags : Satanakulam ,town hall ,
× RELATED மோடி, மோடின்னு சொல்லும் புருசனுக்கு...