×

பணியில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை

தூத்துக்குடி, ஜன. 10: தூத்துக்குடி  மாவட்டத்தில் பணியின்போது இறந்தவர்களின்  வாரிசுதாரர்கள் 8 பேருக்கு வருவாய்த் துறையில்  பணி நியமன ஆணையை கலெக்டர்  சந்தீப் நந்தூரி  வழங்கினார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றிய 8பேர் பணியின் போது இறந்தனர். இதையடுத்து அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை  அடிப்படையில் அரசு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர்களது தகுதிக்கேற்ப வருவாய்த் துறையில்  இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான  பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன உத்தரவுகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி  வழங்கினார்.   மேலும்,  இந்தியா ஸ்பீடு ஸ்கேட்டிங் அஸ்ஸோசியேஷன் சார்பாக கடந்த மாதம் நாக்பூரில்  நடத்தப்பட்ட சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற தூத்துக்குடி  மாவட்டத்தை சேர்ந்த 4 முதல் 16 வயதுக்கு மேற்பட்ட 9 ஸ்கேட்டிங் வீரர்கள்  தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

அப்போது டிஆர்ஓ வீரப்பன், சமூக  பாதுகாப்பு திட்ட தனி சப்கலெக்டர்  சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட நல  அலுவலர் ஜெயசீலி, சப் கலெக்டர்  (பயிற்சி) லாவண்யா மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.இதுபோல் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், கரிசல் டி.என்.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியின்போது இறந்த ராமு என்பவரது மகள் விஜிலா என்பவருக்கு கொம்பன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், புனித சவேரியார் ஆர்.சி. தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியின்போது இறந்த ஜெபஸ்டி ஜெயம்மா என்பவரது மகள் ரபியா என்பவருக்கு பெரியதாழை புனித சவேரியார் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்து அதற்கான ஆணைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Tags : descendants ,
× RELATED ஒரு தமிழர் உள்பட 4 இந்திய வம்சாவளியினர் அமெரிக்க தேர்தலில் வெற்றி