×

பொங்கலுக்கு முன்னதாக அரசே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால், ஜன.10: காரைக்காலில் பொங்கலுக்கு முன்னதாக நெல் கொள்முதலை அரசே செய்ய வேண்டும். என விவசாயிகள்
குறைதீர் முகாமில், வலியுறுத்தியுள்ளனர்.காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில், விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) விக்ராந்த்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், பஜன்கோ அரசு வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில், விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்தார். குறிப்பாக கஜா புயலில் விழுந்த மரங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பன்றி தொல்லைகள் அதிகம் உள்ள  இடங்களில், சம்பந்தப்பட்ட பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் பேசி அவற்றை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கலெக்டர் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய விவசாயிகள், விவசாயிகளின் 50% பிரச்னைகளுக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற பிரச்சினைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும். மேலும் அரசலாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை விரைவு படுத்தவேண்டும். அனைத்து தடுப்பணைகளிளும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

நெடுங்காடு கிராமத்தில், விவசாய நிலத்தை அழித்து கொண்டுவரப்படும் தனியார் விமான நிலையத்திற்கு,  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருவதால், மாவட்ட நிர்வாகம் அதனை தடை செய்ய முன்வரவேண்டும். பொங்கலுக்கு முன்னதாக நெல் கொள்முதலை அரசு செய்யவேண்டும். நெல் அறுவடை இயந்திரங்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். உளுந்து, பயிர் வகைகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து பேசிய கலெக்டர் அரசின் நிதி நெருக்கடி காரணமாக விவசாயிகளுக்கான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் பாசிக் நிறுவனத்தில் கிடைப்பதில்லை வரும் காலங்களில் இந்த குறைபாடு சரி செய்யப்படும் என்றார்.

Tags : State ,Pongal ,
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...