×

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

நெல்லிக்குப்பம், ஜன. 10:  நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை கடந்த ஜனவரி 1 முதல் பயன்படுத்த கூடாது என பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அரசு தடை செய்துள்ளது. அதேபோல் தமிழக அரசின் ஆணையை நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட வர்த்தக வியாபாரிகள் பின்பற்றி பிளாஸ்டிக் பொருட்களையும், பிளாஸ்டிக் கலந்த துணிப் பைகளையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. ஓட்டல்களில் உணவு கட்டித் தருவதற்கு பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்தக் கூடாது. இதை கட்டாயம் வர்த்தகர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வாழை இலை, மந்தார இலையை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது