வெள்ளியணை அரசு பள்ளி மாணவன் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு கல்வி பயணம் செல்ல தேர்வு

கரூர், ஜன.10: கரூர் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு  மாணவர் சதிஷ்குமார் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு கல்விப்பயணம் செல்ல  தேர்வாகி உள்ளார்.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, அரசு மற்றும் அரசு  உதவிபெறும் பள்ளிகளில் 8முதல் 12ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களின்  அறிவியல், தொழில் நுட்பம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன்  சிறந்து விளங்கும் மாணவர்களை மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லும்  வகையில் தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி 20முதல் 30ம்தேதி வரை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய  மேலை நாடுகளுக்கு கல்விப்பயணமாக சுற்றலா சென்று பின்லாந்து நாட்டில் உள்ள  அறிவியல் மையம் பள்ளிகளில் சோதனை முறையில் கற்றல், கற்பித்தல் ரோபோடிக்ஸ்  ஆய்வகம், கப்பல் துறைமுகம், தேசிய அருங்காட்சியம் அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப மையம் ஆகிய இடங்களை பார்வையிடும் பொருட்டு தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.இதில் கரூர் மாவட்டம் வெள்ளியணைஅரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் சதிஷ்குமார் தேர்வு பெற்றுள்ளார்.  மாணவருக்கு முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேல் பாராட்டு தெரிவித்தார்.  நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் தமிழரசன்,  வழிகாட்டி ஆசிரியர் தனபால் உடனிருந்தனர்.

Tags : silver school government school ,Finland ,trip ,Sweden ,
× RELATED வாரத்தில் 4 நாள் மட்டும் வேலை 6 மணி...