×

சென்னை அரசு மருத்துவமனைகளில் டாக்டர் சீருடையில் சுற்றும் மர்ம நபர்கள்

பெரம்பூர்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் மதியம் ஆபரேஷன் தியேட்டரில் ஒரு மர்ம நபர் வார்டு பாய் சீருடையில் நுழைந்தார். இதேப்போன்று, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு பெண், டாக்டர்கள் சீருடையில் நோயாளிகளிடம் பணம் வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை, பழைய சிறைச்சாலை சாலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இங்கு சிறை கைதிகளுக்கு என தனியாக ஒரு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில் எலும்பு சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்குள் நேற்று முன்தினம் மதியம் வாலிபர் ஒருவர் வார்டு பாய் உடை அணிந்து உள்ளே நுழைந்தார். அவர் மீது டாக்டர், நர்ஸ் உள்ளிட்டோருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் சென்னையை சேர்ந்த கேசவன் (28) என்பதும், ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது உறவினரான சிறை கைதி தினேஷ் என்பவருக்கு நேற்று வலது காலில் ஆபரேஷன் நடக்க இருந்தது.இதனால் கேசவன் வார்டு பாய்க்கு பணம் கொடுத்து அவரது உடையில் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து வார்டுபாய்களான ராஜேந்திரன், திருவேங்கடம், பிரசாத் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.இதேபோல் சென்னை அரசு பொதுமருத்துவமனையில், டாக்டர் உடை அணிந்த ஒரு பெண், நோயாளிகளிடம் ஸ்கேன் எடுப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டு தப்பி ஓடினார். மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Tags : persons ,doctor ,Chennai ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...