×

ஆயுதப்படை கேன்டீனில் பொருட்கள் வாங்கும் வெளிநபர்கள் ஓய்வுபெற்ற காவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன.9:  காவல்துறை ஆயுதப்படை கேன்டீனில் வெளிநபர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற காவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ரேஷன்கார்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் வழங்காததை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு தொகையை பிடித்ததில் இருந்து விலக்களித்து முழு மருத்துவ காப்பீடு பலன்களும் கிடைக்க செய்ய வேண்டும். காவல்துறையில் பணிபுரிவோர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 சதவீத பணி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளதை தமிழக அரசு மீண்டும் வழங்க வேண்டும். ஆயுதப்படையில் அமைந்திருக்கும் காவலர்களுக்கான கேன்டீனில் அடையாள அட்டை உள்ள காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். அடையாள அட்டையை வெளிநபர்கள் உபயோகித்து பொருட்கள் வாங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வார ஓய்வு அரசாணைப்படி கட்டாயமாக்கப்பட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நலச்சங்க தலைவர் பென்சிகர் தலைமை வகித்தார். செயலாளர் சுகுமாரன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், சட்ட ஆலோசகர் மரியஸ்டீபன், துணை தலைவர் சுந்தர்ராஜ், துணை செயலாளர் சரத் சந்திரன் உட்பட ஓய்வுபெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rescuers ,Armed Forces Cannes ,guards ,demonstration ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா