ரோட்டில் பிரசவம் குளச்சலில் பச்சிளம் குழந்தை பலி

நாகர்கோவில், ஜன.9: கன்னியாகுமரி நரிக்குறவர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி முத்துமாரி (21). நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் ஊர், ஊராக சென்று வியாபாரம் செய்வது வழக்கம். நேற்று முன் தினம் இரவு குளச்சல் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த போது முத்துமாரிக்கு பிரசவ வலி வந்தது. உடனடியாக அவரது தாயார் பிரசவம் பார்த்துள்ளார். இதில் சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. உடனடியாக முத்துமாரியையும், குழந்தையையும் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது. முத்துமாரி சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தை இறந்த தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

Tags : childbirth ,
× RELATED குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்