×

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தர்ணா

திருப்பூர், ஜன. 9:12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வடக்கு வட்ட கிளை தலைவர் அம்மாசை தலைமை வகித்தார்.   இதில் ஒப்பந்த தினக்கூலி மற்றும் புற ஆதார முறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிகளை வரைமுறைபடுத்தி அனைத்து காலிப்பணியிடங்களையும் சட்டபூர்வ நியமன விதிகளின் கீழ்நிரப்ப வேண்டும், அனைத்து வகையான ஊழியர்களுக்கும் குறைந்த பட்சம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான தகுதி மற்றும் உச்ச வரம்பை நீக்க வேண்டும், பணிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.     இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் மற்றும் பெண்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்.  பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளை தலைவர்கள் வாலீசன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளை செயலாளார் ஜான்சாமுவேல், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர், ஓய்வுபெற்றோர் சங்க மாநில நிர்வாகி செளந்திரபாண்டியன் ஆகியோர் கண்டன உறையாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.உடுமலை:   உடுமலையில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்டகிளை தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். செயலாளர் அம்சராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் தயானந்தன், வட்டாட்சியர் தங்கவேலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் திலீப் நன்றி கூறினார்.

  மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்ட கிளை தலைவர் முகமது இசாக் தலைமை வகித்தார். இதில் 105 பேர் பங்கேற்றனர். கச்சேரி வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் மன்பு ரத்தினசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 75 பேர் பங்கேற்றனர். தபால் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் தபால் விநியோகம் பாதிக்கப்பட்டது.  உடுமலை நகராஜ் வீதியில் உள்ள பிஎஸ்என்எல்., அலுவலகம் முன்பு குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ரங்கசாமி, மயில்சாமி, சிக்கந்தர் பாஷா, விஜயன், சக்திவேல் உள்பட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் 90 சதவீதம் பேர் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Government ,Collector Office ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...