×

பணிக்கு செல்லும் மகளிர் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, ஜன. 9: பணிக்கு செல்லும் அல்லது சுய தொழில் செய்யும் மகளிர் தமிழக அரசின் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசின் மூலம் பணிக்கு செல்லும் அல்லது சுய தொழில் செய்யும் மகளிருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகன வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 1074 பெண்கள் பயனடைந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கு 1074 பயனாளிகளை தேர்வு செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.   பயன்பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். பயனாளிகள் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.   தகுதியுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ இதே அலுவலகங்களுக்கு வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.


Tags : women ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது