×

திருமண நிதியுதவி பெற இடைத்தரகர்களை அணுக வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை

ஈரோடு, ஜன.9: கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் சமூகநலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய ஊராட்சிக்குட்பட்ட கம்ப்யூட்டர் இ-சேவை மையத்தில் திருமணத்திற்கு முன்பே வருமான சான்று, கல்வி தகுதி சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.அவ்வாறு திருமண தேதிக்கு முன்பு வருமான சான்று, கல்வி தகுதி சான்று உள்ளிட்ட சான்றுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும், இதுதொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவாலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்களை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் இடைத்தரகர்களை அணுகாமல் உரிய அலுவலர்களை அணுகி விபரங்கள் பெற்று இ சேவை மையம் மூலமாக பயன் பெறலாம். மேலும் அவ்வாறு நடவடிக்கைகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
× RELATED ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரத்தில்...