×

விதை பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை

தஞ்சை, ஜன. 9:  தஞ்சை விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விதை பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.தஞ்சை  அருகே காட்டுத்தோட்டத்தில் வேளாண்துறையின் விதை பரிசோதனை நிலையம்  செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்  கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் புனிதவதி, உதவி  பேராசிரியர் கருணாகரன், இளங்கலை 2ம் ஆண்டு மாணவ பிரதிநிதி தனவர்தன்,  மாணவிகள் பிரதிநிதி ஹர்சவர்த்தினி உட்பட 70 மாணவ, மாணவிகள் வந்தனர்.
அவர்களை  விதை பரிசோதனை அலுவலர் பிரபாகர் வரவேற்று விதை பரிசோதனை நிலையத்தின்  செயல்பாடு, விதை மாதிரிகள் பெறுதல், பதிவு செய்தல், முடிவு அறிவித்தல்,  பூச்சிநோய் தாக்குதல் கணக்கீடு மற்றும் பிறரக கலவன் பரிசோதனை பற்றி  செயல்முறை விளக்கமளித்தார்.

ஈரப்பதம், புறத்தூய்மை கணக்கிடுதல்,  பகுப்பாய்வுக்கு மாதிரிகளை பிரித்தல், மாதிரிகளை உரிய தளங்களில் விதைப்பு  செய்தல், முளைப்புத்திறன் கணக்கிடுதல் மற்றும் விதை ஆய்வகத்தில் விதை  மாதிரிகளை பாதுகாப்பது பற்றிய விவரங்களை வேளாண் அலுவலர் சரசு செய்து  காண்பித்தார். பரிசோதனைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் பயன்படுத்துவதில்  ஆய்வக உதவியாளர் கலியபெருமாள் உதவி செய்தார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...