×

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் பேரணி

பெரம்பலூர், ஜன.9: பெரம்பலூரில் 12அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நடந்த பேரணி 750பேர் பங்கேற்பு.
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலத்திட்டங்களை திருத் துவதை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். தொழிற் சங்க உரிமையை பாதுகாத்திட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கிடவேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 12அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய 2நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியுள்ளது.

இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பாக வேலைநிறுத்த விளக்கப் பேரணி பாரத ஸ்டேட்வங்கி அருகே தொடங்கி, பாலக்கரை வழியாக புதுபஸ்டாண்டில் முடிவடைந்து. அங்கு நடந்த பேரணி விளக்க கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கராசாமி, ஹிந்து மஸ்தூர்சபா அமைப்பின் மாவட்டச் செயலாளர் சின்னசாமி, ஏஐடியூசி மாவட்ட தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் அகஸ்டின், ஆட்டோ சங்க நிர்வாகிகள் விளக்கவுரையாற்றினர். முன்னதாக தொமுச நிர்வாகி குமார் வரவேற்றார். முடிவில் சிஐடியூ மாவட்ட துணைச்செயலாளர் ராஜ குமாரன் நன்றி தெரிவித்தார். பேரணியில் 750பேர் பங்கேற்றிருந்தனர்.

ஆட்டோக்கள் ஓடவில்லை: பெரம்பலூர் மாவட்டத்தில் தொமுச சார்பில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 30க்கும்மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள், மின்வாரியத்தில் பணிபுரிவோர், 108 ஆம்புலென்சில் பணிபுரிவோர், ஆட்டோசங்கத்தில் பணிபுரிவோர், எறையூர் சர்க்கரை ஆலையில் பணிபுரிவோர் என திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மட்டுமே 350பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதோ டு கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த சிஐடியு, ஏஐடியுசி, முறைசாரா தொழிலாளர்கள் என 400பேர் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்த 2நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போக்குவரத்துக்கழக தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஈடுகட்ட விடுப்பிலிருந்த அண்ணா தொழிற்சங்கத்தினர், தினக்கூலி ஊழியர்களைக் கொண்டு பஸ்கள் போக்குவரத்து தடையின்றி நடத்தப்பட்டது. இருந்தும் மின்வாரியத்தில் நிரந்தர ஊழியர், ஒப் பந்த ஊழியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் மின் விநியோகப் பணிகள், மின்கட்டண வசூலிப்புப்பணிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது. அதேபோல் பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் நகருக்குள்ளும், நகரை சார்ந்து கிராமங்களுக்கும் இயங்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஷேர்ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு, புதுபஸ்டாண்டு தரைக்கடை வியாபாரிகள் தங்கள் கடைகளை சாக்குகளைப் போட்டு மூடி கட்டிவைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறுவணிகம் பாதிக்கப்பட்டது. அரியலூர்: மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், செய்ய தவறிய மத்திய அரசை கண்டித்தும் அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் அண்ணா சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தொமுச சார்பில் மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சட்டநாதன், சங்கர், கனகராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தண்டபாணி, சிஐடியூ, ஐஎன்டியூசி, எச்எம்எஸ் கட்சி நிர்வாகிகள், இருசக்கர வாகனம் பழுது நீக்குபவர் சங்கத்தினர் கலந்து கொண்டன.

இன்று மறியல் பெரம்பலூரில் இன்று சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ் ஆகிய அமைப் புகளின் சார்பாக புதுபஸ்டாண்டில் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

Tags : Central Trade Union Confederation ,EPF ,
× RELATED சொல்லிட்டாங்க…