×

பொங்கல்பரிசு தொகுப்பு வாங்க குவிந்த மக்கள் அத்தியூரில் அதிமுக பிரமுகர்கள் அத்துமீறலால் தள்ளு முள்ளு

பெரம்பலூர்,ஜன.9: பொங்கல் பரிசுத்தொகுப்புக்காக குவிந்தபொதுமக்கள். நீண்ட வரிசையில் கால்கடுக்கக் காத்திருந்து பெற்றுச்சென்றனர். அத்தியூர் கிராமத்தில் அதி முக பிரமுகர்கள் அத்துமீறலால் தள்ளு முள்ளு  ஏற்பட்டது. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத்தொகுப்பாக 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 2அடி நீள கரும்புத் துண்டு 1, 20கிராம் முந்திரி, 20கிராம் திராட்சை, 5கிராம் ஏலக்காய் ஆகியன அடங்கிய பைகளையும், அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் ரூ1000வீதம் வழங்கப் படுகி றது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 நியாய விலைக்கடைகளில் இணைக்கப் பட்டுள்ள 1,74,684 குடும்பஅட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது.  இதனையடுத்து நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து ரேசன் கடைகளின் முன்பும் பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக குவிந்து அமர் ந்தும், வரிசைகளில் நின்றபடியும் பலமணிநேரங்கள் காத்துக்கிடந்து ஏமாந்து சென்ற னர்.
இந்நிலையில் நேற்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டதால் துறைமங்கலம் உள்ளிட்டப் பல்வேறுஇடங்களில் கால்கடுக்கக்காத்திருந்து பரிசுத்தொகுப்புகளை வாங்கிச்சென்றனர்.

அதில் குன்னம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் அத்தியூர், அத்தியூர் காலனி, இந்திரா நகர், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் ரேஷன்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின்கீழ் 1000க்கும்மேற்பட்ட குடும்பஅட்டைகள் உள்ளன. இங்கு முறை யான டோக்கன் வழங்கபடாமல் அதிமுக கட்சிப் பிரமுகர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ரேஷன்கடை உள்ளே சென்றுவந்து பணிகளுக்கு இடையூறுசெய்தனர். இதனால் இந் தக் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியபோது, முன்னேற்பாடுகள் செய் யப்படாததால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில் வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன்வந்த பெண்கள் உட்பட அனைவ ரும் உடல்நசுங்கி பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து கூட்டுறவு சங்கத்தலைவரிடமும், குன்னம் வட்டவழங்கல் அலுவலரிடம் பொதுமக்கள் சார்பாக புகார்கள் தெரிவிக்கப்பட் டது. இருவரும் கண்டுகொள்ளாததால் நெரிசலில், சிக்கி பொதுமக்கள் வலிதாங்கமுடியாமல் பரிசுத்தொகுப்புகளை வாங்கி  வீடுசென்றனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...