×

மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் செங்கல் சூளைகள் அதிகரிப்பு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தீவிரம்

வருசநாடு, ஜன. 9: கடமலை-மயிலை ஒன்றியத்தில் செங்கல் சூளை அதிகரிப்பால் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வருசநாடு அருகே உள்ள கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருசநாடு, கண்டமனூர் போன்ற பகுதிகளில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளது. இதனால் அரசு சார்பில் தொகுப்பு வீடு பசுமை வீடு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் அதிக அளவில் பயன்பட்டு வருவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செங்கல் ஒன்று ரூ.4 முதல் 5 வரை ஏற்றுமதியாகி வருகிறது. இதனால் செங்கல் சூளை பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் அரசு தரப்பில் சாக்கடை கட்டும் பணி, கழிப்பறை கட்டும் பணி போன்ற பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் செங்கல் விலை மிகவும் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கற்கள், மணல் போன்றவைகளை மொத்தமாக செங்கல் சூளை அதிபர்கள் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து கடமலை ஒன்றியத்திலுள்ள காவல்துறையினரும் இவர்களை மிகவும் கண்காணித்து வருகின்றனர்.

Tags : union district ,Kadimalai-Maiya ,
× RELATED கட்சிப் பணி, மக்கள் பணி என இரண்டிலும்...