×

துறைமுகம் தொகுதி பி.வி.ஐயர் தெருவில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்: திமுக உறுப்பினர் சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.சேகர் பாபு (திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: துறைமுகம் தொகுதிக்கு உட்ட பி.வி.ஐயர் கோயில் தெரு, ஆண்டரசன் தெருவிலே ஒரு துணை மின் நிலையத்தை (31/11 கே.வி. திறன் கொண்ட) அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அமைச்சர் உடனடியாக பரிசீலிக்கப்படும் என்றார். மாதங்கள் 18 உருண்டோடி விட்டது. ஏற்கனவே, 12வது சட்டமன்றத்திலே இது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த இடம். காவல் துறைக்கு சொந்தமான இடம் என்பதால், காவல் துறைக்கு மாற்றாக, வண்ணாரப்பேட்டை பகுதியிலே இடத்தை ஒதுக்கீடு செய்வதற்கு மின்சார வாரியம் தயாராக இருக்கிறது.

ஆகவே, அந்த இட மாற்றத்தை விரைவாக எடுத்து கொண்டு அந்த பகுதியில்,  தம்பு செட்டி தெரு பகுதியிலே இருக்கிற துணை மின் நிலையத்தில் அதிகமான மின் அழுத்தம் இருக்கிற காரணத்தால், துணை மின் நிலையம் அங்கு அவசியம் தேவவைப்படுகிறது. உடனடியாக அமைச்சர் அதை அமைக்க வேண்டும்.அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் கோரிய கோரிக்கை நியாயமான கோரிக்கை தான். ஆனால் அவர் கேட்டதற்கு அவரே பதில் சொல்லி விட்டார். காவல் துறைக்கு சொந்தமான இடத்தை மின்சார வாரியம் எடுத்துக்கொண்டு, மின்சார வாரியத்திற்கு சொந்தமான இடத்தை காவல்துறைக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

அந்த இடப்பரிமாற்றம் செய்யும் நேர்வில், இடத்தினுடைய நில மதிப்பு அதிகமான இருக்கிற காரணத்தினாலும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் உறுப்பினர் சொல்லியிருக்கிறார். நான் அதை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அந்த இடமாற்றம் வந்தவுடன் அந்த துணை மின் நிலையம் அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Sargarpabu ,power station ,PVIair Street ,talks ,DMK ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி