×

வெள்ளி நீர்வீழ்ச்சியில் தூய்மை பணி

கொடைக்கானல், ஜன. 9: கொடைக்கானல் நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் நேற்று வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தூய்மை பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா, பாண்டியராஜ், பாண்டிசெல்வம் தலைமையில் பணியாளர்கள் தூய்மைப்பணி மேற்கொண்டனர். வெள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை அகற்றப்பட்டது.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்