×

ஓமலூர் மூதாட்டி கொலை வழக்கு குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறல்

ஓமலூர், ஜன.9: ஓமலூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறலுக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்பி ஆலோசனை நடத்தினார்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாலிக்கடை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (69). டிசம்பர் 8ம் தேதி வீட்டுக்கு வெளியே தூங்கிகொண்டிருந்தார். அப்போது மர்ம நபரால் கொலை செய்யபட்டார். மேலும், அவர் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை கொள்ளை போயிருந்தது. அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் தலையில் பயங்கரமாக தாக்கியதால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனால் வழிப்பறி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஓமலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது வீடு அருகேயுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், கொலை நடந்த நேரத்தில், மொபைல்போனுக்கு வந்த எண்களை கொண்டும், வீட்டில் இருந்தவர்கள், உறவினர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. ஓமலூர் போலீசார் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மாவட்ட எஸ்பி ஜோர்ஜிஜோர்ஜ், நேற்று பாலிக்கடை கிராமத்தில் கொலை நடந்த இடம், வீடு மற்றும் அப்பகுதியை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சக்ரபாணி, குற்றப்பிரிவு போலீசாருடன், எஸ்பி ஆலோசனை நடத்தினார். அதில், குற்றவாளியை பிடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், விசாரணை யுக்திகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : Omaralur Muthathi ,
× RELATED ஜெசிகா லால் கொலை வழக்கு குற்றவாளியை விடுதலை செய்ய டெல்லி ஆளுநர் ஒப்புதல்