×

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

தர்மபுரி, ஜன.9: நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மிட்டாதின்ன அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்ன அள்ளி ஊராட்சியில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடும் வறட்சியால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை. ஒகேனக்கல் கூட்டுகுடிநீரும் நிறுத்தப்பட்டது. இதனால் குடிக்கவும், புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து மிட்டாதின்னஅள்ளி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று காலி குடங்களுடன் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், திடீரென மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து வந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், ஊராட்சி செயலர் வஜ்ஜிரவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Nallampalli ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்