×

இளம் மாணவர் விஞ்ஞானி பயிற்சி முகாம் நிறைவு

நெய்வேலி, ஜன. 9: நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் இளம் மாணவர் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் இருந்து 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 83 பேர் பங்கேற்றனர். இந்த முகாம் 15 நாட்களாக தொடர்ந்து நடந்தது. நிறைவு விழாவில் ஜவஹர் கல்லூரி முதல்வர் சந்திரசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனிதவள துறை இயக்குனர் விக்ரமன் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் என்.எல்.சி., சுரங்க செயல் இயக்குனர் ஹமந்த் குமார்,நெய்வேலி நகர நிர்வாக துணை பொதுமேலாளர் முகமது அப்துல் காதர், ஒருங்கிணைப்பாளர் ஆளவந்தான், பேராசிரியர் மோகன் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுளும் வழங்கபட்டது.Tags : student scientist training camp ,
× RELATED பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் கடல் சீற்றம்