×

நாடாளுமன்றத் தேர்தலில்40 தொகுதியிலும் வெற்றி - அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

திருச்செந்தூர், ஜன. 9:  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. தலைமை வகித்த மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில், கனிமொழி எம்.பி., நமது தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் வந்து ஊராட்சி செயலாளர்களை சந்திக்க உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். இதே போல் தலைவர் மு.க. ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலில் கடுமையாக உழைத்து ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்’’ என்றார்.கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர்கள் ஆழ்வை கிழக்கு நவின்குமார், உடன்குடி  பாலசிங், காயல்பட்டணம் முத்துமுகம்மது முன்னிலை வகித்தனர். ஒன்றியச்  செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்றார். இதில் தொகுதி பொறுப்பாளர் வக்கீல் மனுராஜ்சுந்தரம், முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் ஜெசி பொன்ரானி, மாவட்ட துணை அமைப்பாளர் லதா, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், துணை அமைப்பாளர்கள் திருப்பதி சீனிவாசன், இசக்கிமுத்து, வக்கீல் அணி சாத்ராக், ஜெபராஜ், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் வசீகரன், பேரூராட்சி செயலாளர்கள் ராமஜெயம், கல்யாணசுந்தரம், ரவிசெல்வக்குமார், ஜான்பாஸ்கர், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் தர் ரொட்ரிக்கோ, முன்னாள் கவுன்சிலர்கள் மணல்மேடு சுதாகர், ஜெரால்டு, கோமதிநாயம், சுரேஷ், வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், டெண்டுல்கர், மலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 நகர திமுக பொறுப்பாளர் வாள்சுடலை நன்றி கூறினார்.


Tags : Anita Radhakrishnan MLA ,election ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்