×

தாமிரபரணி குடிநீைர காக்க திமுக தொடர்ந்து போராடும் - ஜோயல் அறிக்கை

தூத்துக்குடி, ஜன. 9: தாமிரபரணி குடிநீரை பாதுகாக்க திமுக தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் தெரிவித்துள்ளார்.வற்றாத ஜீவநதியான தாமிரபரணி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதோடு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பல லட்சக்கணக்கான மக்களும் தாமிரபரணி குடிநீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.வைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றபோதும் அங்கிருந்து குடிநீர் எடுக்க மட்டும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. ஆனால், விதிகளை மீறி அணையின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு தினமும் 9.20 கோடி (20 மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
 இதையடுத்து இவ்வாறு அணையில் இருந்து ஆலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு  நிரந்தரமாக தடை விதிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுமதியோடு இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து வைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்ககூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 28ல் இறுதி தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் இந்த உத்தரவிற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை வரும் 11ம் நடக்கிறது. தமிழக அரசு இவ்வாறு மேல்முறையீடு செய்துள்ளதற்கு ஜோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும். எனவே, தாமிரபரணி குடிநீரை பாதுகாக்க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் இறுதிவரை தொடர்ந்து போராடுவோம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags : DMK ,Tamiraparani ,Joel ,
× RELATED தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே நெல்லை...