×

முள்ளங்கி சோள சப்பாத்தி

செய்முறை:

முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். கலப்பு எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். இதற்கு கலவைக் காய் குழம்பு ருசியாக இருக்கும். நன்மைகள்முள்ளங்கியில் இரும்புச் சத்து உள்ளது, வைட்டமின் ‘சி' உள்ளது. சோயா மாவு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட். கோதுமை மாவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்து உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. கேழ்வரகுவேர்க்கடலை அல்வா100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசைமாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கிண்ணம் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ வெல்லம் / கருப்பட்டி , கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித்துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

Tags : Radish Corn Chapati ,
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்