×

கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் மனு சரியான உணவு படைப்பாற்றலுக்கான சுவரொட்டி போட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பிளாஸ்டிக் தடை அறியாத நிலையில் அபராதம் விதிப்பதை தடுக்க வணிகர்கள் கோரிக்கை மனு

விருதுநகர், ஜன.8:பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட விபரங்கள் அறியாத நிலையில், நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிப்பதை தடுக்க வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்ட முழு விபரங்களை வணிகர்கள் முழுமையாக அறியாத நிலையில் அபாரதம் விதிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடக்கோரி இந்திய தேசிய லீக் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தடையை ஜன.1 முதல் அமுல்படுத்தி உள்ளது. எந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்த கூடாது என்ற முழு விபரங்கள் சிறு, நடுத்தர வணிகர்களுக்கு தெரியாத நிலை உள்ளது. வணிகர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய விபரங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதற்கிடையில் கடைகளுக்குள் புகுந்து நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக உள்ளது. அனைத்து வணிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரைகள் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : competitors ,Village Collector ,traders ,
× RELATED திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது