×

அழகப்பா பல்கலை பேராசிரியர்களுக்கு விஞ்ஞானி விருது துணைவேந்தர் பாராட்டு

காரைக்குடி, ஜன.8: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் கூறுகையில், ‘‘அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் கருப்புச்சாமி டைட்டோனியம் டை ஆக்ஸைடை அடிப்படையாக கொண்டு சூரிய மின்கலம் தயாரிக்கும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். மேலும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இவர் தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிக்காக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆராய்ச்சிக்கு பல்வேறு நிறுவனங்களிடம் ரூ.4.85 கோடி நிதியுதவியாக பெற்றுள்ளார். ராசாயன அறிவியல் பிரிவில் 11 சர்வதேச காப்புரிமை பெற்றுள்ளார்.

இவருக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சார்பில் நானோ பொருட்கள் மற்றும் ஒளி மின் வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சி பணியை அங்கீகரிக்கும் வகையில் 2017ம் ஆண்டுக்கான தமிழக விஞ்ஞானி விருது வழங்கி உள்ளனர்.
அதேபோல் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் அன்பழகன் 2004ம் ஆண்டு இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார். ஜெர்மனியில் உள்ள கீல் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை பேராசியர் அயர்லீயுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
உலகளவில் 66 ஆராய் ச்சி கட்டுரைகள் வெளியி ட்டுள்ளார். கணிதவியல் துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கு வகையில் 2017ம் ஆண்டுக்கான தமிழக விஞ்ஞானி என்ற விருது தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் வழங்கி உள்ளது’’ என்றார்.

Tags : Wisden University Professors Winner ,Vice Chancellor ,
× RELATED தரமற்ற போர்வையில் தயாரிக்கப்பட்ட...