×

கந்தசாமி, காந்திபுரம் ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவை, ஜன. 8: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான பயிற்சி கோவையில் இன்று மற்றும் நாளை நடக்கிறது.  கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தில் குறைதீர் கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பள்ளிக்கு ஒரு ஆங்கில பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வி மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மற்றும் எஸ்.எஸ்குளம் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு ராஜவீதி துணிவணிகர் சங்க பள்ளியில் இன்று (8ம் தேதி), பேரூர், பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு 12ம் தேதியும் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வரைப்படத்திறன் (மேப்) குறித்த பயிற்சி கடந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2018-19 கல்வியாண்டிற்கான பயிற்சி நாளை நடக்கிறது.  இதில், 32 பள்ளிகளில் இருந்த தலா 2 சமூக அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வரைப்படத்திறன் குறித்த பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gandhipuram English ,Social Science Teachers ,
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை