×

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

கோபி,ஜன.8:  கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவிற்கு 700 போலீசார் பாதுகாப்பு பணியிலும், 4 இடங்களில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து 10ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் தலைமையில், 4 டி.எஸ்.பிக்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 85 எஸ்.ஐ.,க்கள், போலீசார், ஊர்க்காவல்படை என 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  குண்டம் திருவிழா அன்று இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களால் கடும் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, இந்த ஆண்டு ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோயில், பழைய பாலத்து கருப்பராயன் கோயில், அந்தியூர் சாலையில் புதுக்கரைபுதூர் அருகே வயல் என நான்கு இடங்களில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று குண்டம் திருவிழாவை கண்காணிப்பதற்காக கோயில் மற்றும் வெளிபுறங்களில் 35 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது.

Tags : policemen ,festival ,Kalyanam Kundam Kundam ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...