×

கூட்டு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜன. 8: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீனம்பநல்லூர் அடுத்த  திருக்களார் கிராமத்தில் சாளுவன் ஆற்றங்கரை பாலத்தின் வழியே கொள்ளி டம் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டதிற்கான ராட்சச இரும்பு குழாய் செல்கிறது.இக்குழாய் கடந்த 5 நாட்களாக உடைந்து அதிலிருந்து ஆயிரக்கணக் கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனை மாவட்ட நிர் வாகமும்,  குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலஞானவேல் அளித்த தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் நேற்று திருக்களர் கிராமத்திற்கு வந்து உடைந்த குழா யை நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து எம்எல்ஏ ஆடலரசன் கூறுகையில், கஜா புயல்  திருத்துறைப் பூண்டி தொகுதியில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்து 50 நாட்கள் ஆகியும் கிராமப் புறங்களுக்கு மின் இணைப்புகள் முழுமை யாக கொடுக்கப் படவில்லை.இந்நிலையில் திருக்களர் கிராமத்தில் கொள்ளிடம் வேதா ரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ராட்சச இரும்பு  குழாய் உடைந்து 5 நாட்கள் ஆகியும் அதனை சீரமைக்க அதிகாரிகள் முயற்சி எடுக்காதது கண்டிக்கத்தக்கது.குடிநீர் கிடைக்காமல் ஒரு பக்கம் மக்கள் அவதியுறும் நிலையில்  ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக போவது வேதனையை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் மெத்தனப் போக்கை கடை பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறினார்.

Tags : MLA Abdullah ,
× RELATED பாதிக்கப்பட்ட மக்களுக்கு...