×

மருத்துவ துறையில் உடற்கூறியல் மிகவும் முக்கியமானது : டீன் பாலசுப்பிரமணியன் பேச்சு

நாகர்கோவில், ஜன.8: மருத்துவ துறையில் உடற்கூறியல்  துறையின் பங்கு மிகவும் முக்கியமானது என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறினார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி உடற்கூறியல் துறை சார்பில், மருத்துவ மாணவ, மாணவிகளுக்கான உடற்கூறியல் துறை தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். உடற்கூறியல் துறை தலைவர் டாக்டர் அனிதா வரவேற்றார். மருத்துவமனை கண்கணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த உடற்கூறியல் பேராசிரியர்கள் டாக்டர்கள் சாந்தி, பிரகாஷ், நிர்மலா தேவி, பயாரில் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு  தலைப்புகளில் பேசினர். முன்னதாக டீன் பாலசுப்பிரமணியன் பேசுகையில், மருத்துவ துறையில் உடற்கூறியல் துறை பங்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். மருத்துவத்தின் அடிப்படை வேராக விளங்கி வருகிறது. இந்த துறையில் பல நவீன யுக்திகள் கையாளப்படுவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு குறைபாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள உடற்கூறியல் உதவுகிறது. மருத்துவ மாணவ, மாணவிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிந்து கொள்ள வேண்டும். குமரி மருத்துவக்கல்லூரியில் உடற்கூறியல் துறை சிறப்பாக செயல்படுகிறது. வித்தியாசமான முறையில் பல நிகழ்வுகளை செய்துள்ளனர் என்றார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும், உடற்கூறியல் சமூக மையமும் இணைந்து இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தன.

Tags : Dean Balasubramanian ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி