×

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம், ஜன. 8: விழுப்புரம் மீனாட்சியம்மன் நகர், வைத்தியநாதன் நகரை சேர்ந்த மக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப
தாவது:விழுப்புரம் நகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கணபதி நகர், ரஹிம்சா லேஅவுட், ரகமத்நகர், ஆறுமுகம் லேஅவுட் பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியை சுற்றியுள்ள தனியார் கம்பெனிகளில் ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர் இரவும், பகலுமாக வேலைக்கு சென்று வருகின்றனர்.இப்படியிருக்க குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடையினால் பெண்கள், குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல் கடைவீதிகளுக்கு சென்று வர பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் மூடிய டாஸ்மாக் கடைக்கு பதில் மற்றொரு டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மது குடிக்க வருபவர்களால் எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். அதுமட்டுமின்றி இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகில் இணைப்பு சாலை குறுகலாக உள்ளதால் மது குடித்துவிட்டு வருபவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே எங்கள் பகுதி மக்களின் நலனை கருதி டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Tags : petitioner ,shop ,closure ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி