×

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு

காரைக்கால், ஜன. 8: காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு நேற்று ஆய்வு நடத்தியது.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை தங்களது பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனையை அணுகினர். அப்போது, மருத்துவமனையை மேம்படுத்தினால் மட்டுமே மாணவ, மாணவிகள் மருத்துவமனையை பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை மேம்படுத்த ஜிப்மர் நிர்வாகம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்நிலையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகளை தொடங்குவது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தலைமையில் டீன் சுவாமிநாதன், துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் நேற்று காரைக்கால் அரசு பொது  மருத்துவமனையை ஆய்வு செய்தனர். பின்னர், மருத்துவமனை கண்காணிப்பாளர், உள்ளிருப்பு அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) விக்ராந்த் ராஜாவிடமும் ஆலோசனை நடத்தினர்.

Tags : Jipmer Medical Group ,Karaikal Government Hospital ,
× RELATED காரைக்கால் அரசு மருத்துவமனையில்...