×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்டாம்ஸ் சாலை-தி.நகரை இணைக்க 97 கோடியில் பிரமாண்ட மேம்பாலம்: 1 கி.மீ நீளத்தில் அமைகிறது

சென்னை: எஸ்டாம்ஸ் சாலையுடன் தி.நகரை இணைக்கும் வகையில் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அண்ணா சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று அமையவுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தி.நகரில் நடைபாதை வளாகம், பூங்கா சீரமைப்பு, எல்இடி விளக்குள் அமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் சீரமைப்பு, பல் அடுக்கு வாகன நிறுத்தம், ஆகாய நடைபாதை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதேபோல், மந்ைதவெளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பூங்காவும், மெரினா கடற்கரை அருகில் உள்ள நேப்பியர் பாலம் பின்புறம் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து பூங்காவும், அமைக்கப்பட்டு வருகிறது.

இதைத் தவிர்த்து 662 கட்டிடங்களில் சேலார் பேனல் அமைக்கும் பணி, தெரு விளக்குளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணி, சைக்கிள் ஷேரிங் திட்டம், ஒருங்கிணைந்த வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு மற்றும் தியாகராய சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில்  மேம்பாலம் ஒன்று ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழ் அமைக்கப்பட உள்ளது.  இந்த மேம்பாலம் தி.நகர்  தெற்கு போக் சாலையில் தொடங்கி எல்டாம்ஸ் சாலையில் முடிவடைகிறது. 995 மீட்டர் நீளத்தில் அமையுள்ள இந்த மேம்பாலத்தின் பணிகள் 20 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தவிர்த்து அண்ணா சாலையில் வெங்கட் நாராயணா சாலை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை ஆகியற்றை இணைக்கும் வகையில் மற்றொரு பாலம் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம்
பிராட்வே பேருந்து நிைலயம் அருகில் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை இணைக்கும் வகையில் மல்டி மாடல் இன்டகிரேன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜெஎல்எல் என்ற நிறுவனம் ஆய்வு நடத்த தொடங்கியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் இதற்கான பணிகள் தொடங்கும், எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Elamdas Road-T.Nagar ,Smart City Scheme ,highway ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...