×

செய்யூர் பகுதியில் சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்

செய்யூர், ஜன.8: மதுராந்தகம் தொகுதிக்குட்பட்டிருந்த செய்யூர் ஊராட்சி கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் போது தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இவ்வூராட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் உருவாகி வளர்ந்து வரும் பகுதியாக உருவாகி வருகிறது. இப்பகுதியில் நாளுக்கு, நாள் மக்கள் தொகையும் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்காக சிறுவர்கள் பூங்காவோ, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் இப்பகுதியில் உருவாக்கப்படாமல் உள்ளது. இதனால் விடுமுறை நாட்களை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வீட்டில் இருந்தபடி அலைபேசி மற்றும் தொலைக்காட்சியிலேயே நேரத்தை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று சிறுவர்கள், இளைஞர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் அவர்களின் மனநிலை பெரிதாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக இப்பகுதியில் சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வூராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரையில் யாரும் இதற்காக முன்வரவில்லை என அப்பகுதி வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே  இப்பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைத்து தந்து,  இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானம் உருவாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : children ,playground ,Cheyur ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...