×

நகைக்கடை உரிமையாளர் வீட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி 1.5 லட்சம் துணிகர கொள்ளை

சென்னை, ஜன. 8: பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் வீட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 1.5 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.  கொருக்குப்பேட்டை உல்லாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (37). சவுகார்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் உள்ள நகைகள் தவிர, பல்வேறு டிசைன் நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். நேற்று காலை சந்தோஷ் குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் சந்தோஷ், வாடிக்கையாளர்களுக்கு தேவையான நகைகளை எடுப்பதற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு அறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 1.5 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, சந்தோஷ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் மர்மநபர்கள் எடுத்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்கணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், சந்தோஷ் கடையில் வேலை செய்பவர்கள், வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்தும் தீவிரமாக விசாரிக்கின்றன

Tags : jeweler owner ,house ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...