×

கமிட்டியினர் செய்திருந்தனர். தூத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரிகளை வணிகர்கள் முற்றுகை போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி, ஜன. 4: தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த வணிகர்கள், அதிகாரிகளையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக அரசால்  தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தூத்துக்குடியில்   பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல்  செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் சுமார் 800 கிலோவுக்கும்  மேற்பட்ட எடையிலான பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்  செய்து எடுத்து சென்றனர். இதனிடையே நேற்று காலை தூத்துக்குடி-  பாளை ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள்  பிளாஸ்டிக் பொருட்களுடன் பேப்பர் கப்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர். தகவலறிந்ததும் தூத்துக்குடி நகர பகுதி வர்த்தகர்கள் தமிழ்நாடு  வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் திரண்டு வந்தனர். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் பணியில் இருந்த மாநகராட்சி வாகனத்தை  சிறைப்பிடித்ததோடு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். குறிப்பாக பேப்பர் கப்களை  எதற்கு பறிமுதல் செய்யவேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர்.

 இதையடுத்து மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், வடபாகம் இன்ஸ்பெக்டர்  பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வணிகர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட வணிகர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜாண் வர்க்கீசை சந்தித்து முறையிட்டனர். அப்போது  அவர், ‘‘பேப்பர் கப்புகளில் பிளாஸ்டிக் கலந்திருந்தால் கண்டிப்பாக பறிமுதல்  செய்யப்படும். மாறாக பேப்பர் கப்புகளாகவே இருந்தால் திரும்ப வழங்கப்படும்’’  என உறுதியளித்தார். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால்  தூத்துக்குடி- பாளை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Tags : committee ,blockade ,Tuticorin Corporation ,
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...