×

சபரிமலையின் புனிதம் காக்க வேண்டி எட்டயபுரத்தில் சிறப்பு வழிபாடு

எட்டயபுரம், டிச. 4:  சபரிமலையின் புனிதம் காக்க வேண்டி எட்டயபுரம் ஜோதி ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் முழந்தாளிட்டு கையில் அகல்விளக்கேந்தி இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தினர். குருசாமி சங்கரன் தலைமையில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரமிருந்துவரும் 120க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர். குறிப்பாக சபரிமலைக்கு குறிப்பிட்ட வயது பெண்கள் செல்லாமல் காலங்காலமாக இருந்து வரும் மரபை காப்பாற்ற வேண்டும், சபரிமலைக்கு மரபுகளை மீறி செல்ல நினைக்கும் பெண் பக்தர்களுக்கு மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். பக்தியோடு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் நேரக்கூடாத மற்றும் சபரிமலையின் புனிதம் காக்க வேண்டி முழந்தாளிட்டு கைகளில் அகல்விளக்கேந்தி பஜனை பாடல்கள் பாடியபடி இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags : Ettayapuram ,Sabarimala ,
× RELATED எட்டயபுரத்தில் காங். உறுப்பினர் சேர்க்கை