×

கயத்தாறில் 260வது பிறந்தநாள் விழா கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை

கயத்தாறு, ஜன. 4:  260வது பிறந்த நாளையொட்டி கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சுதந்திர போராட்டத்தில் முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாரில் மணிமண்டபம் கட்டப்பட்டு 7 அடி உயரத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 260வது பிறந்த நாளையொட்டி கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதே போல் விஏஓ ராஜசேகர், கிராம உதவியாளர் அழகர்சாமி,  வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நிறுவனர் குட்டி, பொருளாளர் செண்பகராஜ், அமைப்பாளர் கிருஷ்ணசாமி, காங்.கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, நகர காங்.கமிட்டி ராஜாமணி, மக்கள் நீதி மய்யம் கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர்கள் சிவா, தாமோதரக் கண்ணன், கோவில்பட்டி நகர பொறுப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : birthday celebration ,Kattabomman ,
× RELATED பெரியார் பிறந்த நாள் விழா