×

ஏர்வாடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்

ஏர்வாடி, ஜன.4:  ஏர்வாடி பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  விழிப்புணர்வு கலந்தாலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக அதிகாரி முகைதீன்கான் அலி தலைமை வகித்தார். ஏர்வாடி வியாபாரி சங்க தலைவர் முகைதீன், நெல்லை மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் ஹம்சா, ஏர்வாடி வியாபாரி சங்க பொருளாளர் ஜாஹீர் முன்னிலை வகித்தனர்.நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் ஆலோசனையின்படி, வணிகர் சங்க பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகளுடன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மாற்று பொருட்கள் குறித்து கூட்டத்தில்  எடுத்துரைக்கப்பட்டது. நாங்குநேரி செஞ்சிலுவை சங்கம் சபேசன், ஏர்வாடி காவல்துறையினர் மற்றும் வியாபாரிகள் கலந்துரையாடினார்கள்.

Tags : meeting ,Airwad ,
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்