×

சிவகிரியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

சிவகிரி, ஜன.4:  சிவகிரியில் விடுதலைப்போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 260வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.சிவகிரியில் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி மற்றும் கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் கட்டபொம்மன் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.  இதையொட்டி வடக்கு ரதவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தொடர்ந்து காந்தி சாலையில் கொடிமரம் அமைக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் சமுதாய நாட்டாண்மை கந்தசாமி, தலைவர் கிருஷ்ணசாமி, இளைஞரணி நிர்வாகிகள் கட்டபொம்மன், தலைமலை, முனியாண்டி, பெருமாள், மாரியப்பன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags : birthday party ,Veerapandiya Kattabomman ,
× RELATED மோடி பிறந்த நாள் விழாவில் காஸ் நிரப்பிய பலூன்கள் வெடித்து 10 பேர் காயம்