×

பெல் குடியிருப்பு வளாகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம் கண்டித்து சாலைமறியல்

திருவெறும்பூர், ஜன. 4: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பு வளாகத்தில் அனுமதியின்றி  வைக்கப்பட்ட புத்தர் சிலையை பெல் நிர்வாகம் நேற்று அகற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மகாபோதி பவுத்த சாங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.திருச்சி பெல்லில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வேலைப்பார்த்து வருவதால்  அவர்கள்  வழிபாடு செய்வதற்கு ஏதுவாக குடியிருப்பு வளாகத்தில் இந்து, முஸ்லிம்  மற்றும் கிறிஸ்தவ கோயில்கள் உள்ளன. பெல் நிர்வாகத்தில் பதிவு செய்யப்படாத மகாபோதி பவுத்த சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கம் சார்பில் மூன்றரை அடி உயர புத்தர் சிலை பெல் டி செக்டர் பகுதியில் கடந்த 29ம் தேதி இரவு நிறுவப்பட்டது. சிலைக்கு அனுமதி பெறவில்லை என பெல் பாதுகாகாவலர்கள் பெல் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றிக் கொள்வதற்கு கால அவகாசம் கொடுத்து 3ம் தேதி புத்தர் சிலையை அகற்றுவதற்கு பெல் நிர்வாகம் பெல் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டுள்ளனர். அதற்படி நேற்று மாலை பெல் நிர்வாகம் தங்களின் பாதுகாவலர்கள் மற்றும் பெல் போலீசாரை வைத்து புத்தர் சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முற்பட்டனர். இதற்கு மகாபோதி பவுத்த சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பெல் நிறுவன பாதுகாவலர்கள் புத்தர் சிலையை மினி ஆட்டோவில் எடுத்து சென்று விட்டனர். இதனை தடுக்க முயன்ற பெரியசாமி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இந்நிலையில் புத்தர் சிலை இருந்த இடத்திற்கு பெல் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் பெல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் புத்தர் சிலையை பெல் நிர்வாகம்  அகற்றியதை கண்டித்து மகாபோதி பவுத்த சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சோந்த நிர்வாகி திலீபன்ரமேஷ் தலைமையில் பெல் பயிற்சி மையம் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவாகளிடம் பெல் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அருகே உள்ள அம்பேத்கர்  முன்பு பெல் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் பரப்பரப்பு ஏற்பட்டது.

Tags : road ,Buddha ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...