×

முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் ஜன.8ல் சிறப்பு குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜன.4: முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் வருகிற 8ம் தேதி நடைபெறும் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் முசிறி, துறையூர், தொட்டியம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். திருச்சி கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாவட்டத்தில் ஆர்டிஓ அளவில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டரின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் மற்றும் ஆய்வுக்கூட்டம் முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கையினை மனுவில் குறிப்பிட்டு நேரடியாக கலெக்டரிடம் அளிக்கலாம். மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.

முசிறி கோட்டத்திற்கு உட்பட்ட முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால் உரிய தீர்வு காணப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.முசிறி துணை மின் நிலைய பகுதிகள்: முசிறி, சிங்காரச்சோலை, பார்வதிபுரம், பழைய பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர், ரோடு, புதிய பேருந்து நிலையம், சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைப்புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

துறையூர் துணை மின் நிலைய பகுதிகள்:  துறையூர், முருகூர், கோணபாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி (கிழக்கு சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புலிவலம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, புதுப்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி,சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம்.

Tags : Special Drawing Meeting ,Murthy RTO Office ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை