×

ஆபத்தான நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது

திண்டிவனம், ஜன. 4:   திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014- 2015ம் ஆண்டு சுமார் ரூ. 6.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் இந்த அங்கன்வாடிக்கு வந்து செல்வது வழக்கம்.

மேலும் இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில், ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த செயல்படாத ஆழ் துளைகிணறு மேல் மூடி ஏதும் இல்லாமல் திறந்தவாறு ஆபத்தான நிலையில் இருந்தது. சமீபத்தில் இது சம்பந்தமாக  தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் அதனை பார்வையிட்டு அந்த ஆழ்துளை கிணற்று மேல் மூடியை பயன்படுத்தி மூடினார். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட அதிகாரிக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...