×

ஆட்டிடியூட் பி பிரைட் ஹெர்பல்ஸ் பொருட்கள் மூலம் ஸ்கின்கேர் மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்தது ஆம்வே

கோவை, ஜன.4: ஆம்வே இந்தியா, இந்தியாவின் மிகப்பெரிய எம்எம்சிஜி நேரடி விற்பனை கம்பெனி. ஆட்டிட்யூட் பி பிரைட் ஹெர்பல்ஸ் அறிமுகத்தின் மூலம், ஹெர்பல் ஸ்கின்கேர், தோல் பராமரிப்பு மார்க்கெட்டில் காலடி எடுத்து வைக்கிறது.  தாவரங்களின் நன்மை மற்றும் நவீன ஆய்வு பலன் இரண்டையும் இணைத்து ஆட்டிடியூட் ரேஞ்ச் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையின் சிறப்பம்சம் மற்றும் அறிவியலின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கம்பெனியின் பாரம்பரியத்தின் பின்னணியில் இந்த அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெர்பல் ஸ்கின்கேர் பிரிவில் உச்சபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கத்தில் ஆம்வே புதிய வகை பொருட்களை அறிமுகம் செய்கிறது. ஆம்வே, இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரி அன்சு புத்ராஜா, ஆட்டிடியூட் பி பிரைட் ஹெர்பல் பொருட்களை அறிமுகம் செய்து பேசுகையில், இந்திய ஹெர்பல் பிரிவு நிறைய வாய்ப்புகளை உள்ளடக்கியது. அந்த வாய்ப்புகளை, புதிய வகை பொருட்களை~ தரத்தோடு உருவாக்கி அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்படுத்திக்கொள்ள  கவனம் செலுத்துகிறோம். அழுகுசாதன பிரிவில், ஆட்டிடியூட் பி பிரைட் ஹெர்பல்ஸ் அறிமுகம் என்பது எங்களின் புதிய கண்டுபிடிப்பு. தோளை பளபளப்பாக்கி மாசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் இந்த தயாரிப்பு, ஹெர்பல் மார்க்கெட்டில் புது புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.

Tags : Amadeo B ,
× RELATED ஈரோடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து ரூ.45...